Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அமெரிக்காவின் 580 மில்லியன் டாலர் ஆர்டரை கைப்பற்றியது வெல்ஸ்பன்

அமெரிக்காவின் 580 மில்லியன் டாலர் ஆர்டரை கைப்பற்றியது வெல்ஸ்பன்

டேட்டா சென்டர்கள் தங்களது தடையற்ற மின்சாரத் தேவைக்காக இயற்கை எரிவாயுவை அதிகம் நம்பத்தொடங்கியுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியாவைச் சேர்ந்த முன்னணி எஃகு குழாய் உற்பத்தி நிறுவனமான வெல்ஸ்பன் கார்ப், அமெரிக்காவில் சுமார் 55 பில்லியன் ரூபாய் மதிப்பிலான இயற்கை எரிவாயு குழாய் விநியோக ஆர்டரைக் கைப்பற்றியுள்ளது. தனது அமெரிக்க துணை நிறுவனமான 'வெல்ஸ்பன் டியூபுலர் எல்எல்சி' மூலமாக இந்த ஒப்பந்தத்தை அந்நிறுவனம் பெற்றுள்ளது.

அமெரிக்காவின் முக்கிய எண்ணெய் உற்பத்திப் பகுதியான பெர்மியன் பேசினில் அமையவுள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டத்துக்குத் தேவையான, சிறப்பு பூச்சுடன் கூடிய இரும்புக் குழாய்களை இந்நிறுவனம் வழங்கவுள்ளது. இந்த புதிய குழாய் வழித்தடம், பெயர் வெளியிடப்படாத உலகின் முன்னணி நிறுவனம் ஒன்றின் மிகப்பெரிய டேட்டா சென்டருக்குத் தேவையான இயற்கை எரிவாயுவை விநியோகிக்கப் பயன்படுத்தப்பட உள்ளது.

தற்போதைய நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சியில், டேட்டா சென்டர்கள் தங்களது தடையற்ற மின்சாரத் தேவைக்காக இயற்கை எரிவாயுவை அதிகம் நம்பத்தொடங்கியுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து திட்டங்களுக்கான பெரிய விட்டம் கொண்ட எஃகு குழாய்களைத் தயாரிப்பதில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெல்ஸ்பன் தடம் பதித்துள்ளது. தற்போது ஆர்டர் பெறப்பட்டுள்ள இந்தக் குழாய்கள் அனைத்தும் அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்யப்பட்டு, 2029-ம் நிதியாண்டுக்குள் முழுமையாக விநியோகிக்கப்படும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம், வெல்ஸ்பன் கார்ப் நிறுவனத்தின் உலகளாவிய மொத்த ஆர்டர்களின் மதிப்பு வரலாறு காணாத வகையில் 5.25 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி
Tourist ban imposed at Kodiveri Dam
அடுத்த செய்தி
தங்கக் கடன்களில் அதிகரிக்கும் வாராக் கடன்: ஸ்ரீராம் பைனான்ஸ்

தொடர்புடைய செய்திகள்